ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு காங்., கண்டனம்
ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு காங்., கண்டனம்
ADDED : ஜூன் 16, 2025 01:12 AM

புதுடில்லி: மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே, போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இது குறித்து சமூக வலைதளத்தில், காங்., பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:
ஈரானில் அப்பாவி மக்களையும், குடியிருப்புப் பகுதிகளையும் குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இது, பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது.
எனவே, வன்முறையை கைவிட்டு, சுமுக தீர்வு ஏற்பட இருதரப்பும் பேச்சு நடத்த வேண்டும். இதன் வாயிலாக மட்டுமே அமைதி பாதையில் திரும்ப முடியும்.
இந்தியா, ஈரானுடன் நீண்டகால நட்புறவு கொண்டுள்ளது. சமீபகாலமாக, இஸ்ரேலுடனும் நல்லுறவை பேணி வருகிறது.
எனவே, இரு நாடுகளுக்கும் இடையே நீடிக்கும் போர் பதற்றத்தை தணிக்கும் பணியை, மத்திய அரசு தெளிவுடனும், பொறுப்புடனும் மேற்கொள்வது அவசியம்.
மேற்காசிய நாடுகளில், லட்சக்கணக்கான இந்தியர்கள் வசித்து வரும் நிலையில், அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளில் நம் அரசு ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.