ADDED : மார் 07, 2024 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹூப்பள்ளி, : ''லோக்சபா தேர்தல் காங்., வேட்பாளர் தேர்வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது,'' என, போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி தெரிவித்தார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் கூறியதாவது:
சட்டசபை தேர்தலுக்கு வேட்பாளர்கள் பட்டியலை விரைந்து வெளியிட்டோம். லோக்சபா தேர்தலுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியாவது தாமதமாகிறது. முதல் வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ளது; நான்கைந்து தொகுதிகளில் குழப்பம் உள்ளது.
காங்கிரசின் முதல் பட்டியல், 9 அல்லது 10ல் வெளியாகும். மைசூரு, மாண்டியா, துமகூரு, பெங்களூரு ரூரல், பெங்களூரு சென்ட்ரல், பெங்களூரு வடக்கு, உடுப்பி - சிக்கமகளூரு, சித்ரதுர்கா, கோலார், சிக்கபல்லாபூர் ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

