'முடா' வழக்கில் காங்., சதி: அமைச்சர் ராஜண்ணா 'டவுட்'
'முடா' வழக்கில் காங்., சதி: அமைச்சர் ராஜண்ணா 'டவுட்'
ADDED : அக் 01, 2024 12:17 AM

ஹாசன் : ''முடா வழக்கில் முதல்வருக்கு எதிரான ஆவணங்களை கொடுத்து, எங்கள் கட்சியினரும் சதி செய்து இருக்கலாம்,'' என, கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா சந்தேகம் தெரிவித்துள்ளார்.
ஹாசனில் நேற்று அவர் அளித்த பேட்டி:
'முடா' வழக்கில் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிரான ஆவணங்களை கொடுத்தது, காங்கிரஸ் தலைவர்கள் தான் என்று பா.ஜ., தலைவர்கள் கூறி வருகின்றனர். அது உண்மையா, பொய்யா என்று எங்களுக்கு தெரியாது.
அந்த ஆவணங்களை கொடுத்து எங்கள் கட்சியினர் கூட சதி செய்திருக்கலாம். அப்படி நடக்க வாய்ப்பு இல்லை என்று மறுக்கவும் முடியாது. இதெல்லாம் அரசியலில் சகஜம். அனைத்துக் கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு, பதவி, அதிகாரத்தை அனுபவிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். இதை யாராலும் தடுக்க முடியாது.
சித்தராமையாவை ராஜினாமா செய்ய சொல்லும் தகுதி, பா.ஜ., தலைவர்களுக்கு இல்லை. அவர்கள் அனைவரும் ஹரிச்சந்திரனா? ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்துவதாக முதல்வர் கூறியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் ஒப்புக்கொண்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.