ADDED : செப் 18, 2024 07:31 PM
ரோஸ் அவென்யூ:காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுலுக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துகளை தெரிவித்த பா.ஜ., தலைவர்களை கண்டித்து, டில்லி காங்கிரஸ் தலைவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், தன் அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது, சீக்கியர்களின் நிலை குறித்து பேசியிருந்தார். அதற்கு பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
ராகுலை 'நம்பர் ஒன் பயங்கரவாதி' என, மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு விமர்சித்திருந்தார். இவரது கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று காலை அக்கட்சி தொண்டர்கள் கூடி, மத்திய இணை அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அவரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரைக் குறிவைத்து ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்களின் சமீபத்திய அறிக்கைகள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் காவல்துறையில் புகார் அளித்துள்ளது.