2009ம் ஆண்டு வரை எந்தத் திட்டத்திற்கும் காந்தியின் பெயரை சூட்டாதது ஏன்: பாஜ கேள்வி
2009ம் ஆண்டு வரை எந்தத் திட்டத்திற்கும் காந்தியின் பெயரை சூட்டாதது ஏன்: பாஜ கேள்வி
ADDED : டிச 21, 2025 07:43 PM

ஜலந்தர்: நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ், 2009ம் ஆண்டு வரையில் எந்தத் திட்டத்திற்கும் காந்தியின் பெயரை வைக்கவில்லை என்று பாஜ எம்பி அனுராக் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள விக்சித் பாரத் ஜி ராம் ஜி' திட்டத்தின்படி, 100 நாட்கள் வேலையானது, 125 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வேலைவாய்ப்பு அதிகரிக்கவே செய்யும். இந்தத் திட்டத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஒப்புதல் அளித்துவிட்டார்.
இருப்பினும் இந்த திட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சியினர் எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். காந்தியின் பெயரை நீக்கி விட்டதாகவும் புகார் கூறி வருகின்றனர். நாடு தழுவிய போராட்டத்துக்கும் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில், நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ், 2009ம் ஆண்டு வரையில் எந்தத் திட்டத்திற்கும் காந்தியின் பெயரை வைக்கவில்லை என்று பாஜ எம்பி அனுராக் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; பொய்யுக்கு மறுபெயர் தான் காங்கிரஸ். ஏனெனில் அவர்கள் பொய் பிரசாரத்தின் மூலம், நாட்டு மக்களை தவறான பாதையில் வழிநடத்துகிறார்கள். அவர்கள் நீண்ட காலம் ஆட்சியில் இருந்துபோதும் கூட, 2009ம் ஆண்டு வரை எந்தத் திட்டத்திற்கும் மகாத்மா காந்தியின் பெயரை வைக்கவில்லை. அதன்பிறகு தான், 100 நாள் வேலைத்திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயரை சூட்டினார்கள், இவ்வாறு அவர் கூறினார்.

