ADDED : மார் 07, 2024 12:19 AM
ஜெய்ப்பூர்:“லோக்சபா தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தின் 25 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெறும்,” என, மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் கூறினார்.
ராஜஸ்தான் மாநில பா.ஜ., தலைமை அலுவலகத்துக்கு வந்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், நிருபர்களிடம் கூறியதாவது:
நம் நாட்டை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி மும்முரமாக செயல்பட்டு வருகிறார். வரும் 2047ம் ஆண்டுக்குள் நம் நாடு வலிமையான நாடாக மாறும்.
கடந்த 10 ஆண்டுகளில் நம்நாடு வேகமாக முன்னேறியுள்ளது. இது, பிரதமர் மோடியால் கிடைத்த வளர்ச்சி. அவரால்தான் நம்நாடு இன்று, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. மிக விரைவில் மூன்றாவது இடத்துக்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை.
காங்கிரஸ் கட்சிக்கு கொள்கையும் கிடையாது. முடிவெடுக்கும் திறமையும் இல்லை. லோக்சபா தொகுதியில் ராஜஸ்தானின் 25 தொகுதிகளிலும் பா.ஜ., அமோக வெற்றி பெறும்.
'இவ்வாறு அவர் கூறினார்.

