sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெங்களூரு மத்திய தொகுதியில் காங். சார்பில் பெண்ணுக்கு வாய்ப்பு?

/

பெங்களூரு மத்திய தொகுதியில் காங். சார்பில் பெண்ணுக்கு வாய்ப்பு?

பெங்களூரு மத்திய தொகுதியில் காங். சார்பில் பெண்ணுக்கு வாய்ப்பு?

பெங்களூரு மத்திய தொகுதியில் காங். சார்பில் பெண்ணுக்கு வாய்ப்பு?


ADDED : ஜன 24, 2024 05:47 AM

Google News

ADDED : ஜன 24, 2024 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா.ஜ.,வின் பாதுகாப்புக் கோட்டையான, பெங்களூரு மத்திய தொகுதியில், காங்கிரஸ் சார்பில் பெண் வேட்பாளர் களமிறக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

லோக்சபா தேர்தலுக்கு, கர்நாடகாவின் ஆளுங்கட்சியான காங்கிரஸ், எதிர்க்கட்சிகளான பா.ஜ., - ----ம.ஜ.த., தயாராகி வருன்றன. இந்தத் தேர்தல், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் மற்றும் அமைச்சர்களுக்கு, அக்னி பரீட்சையாக இருக்கும்.

இந்தத் தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றினால் மட்டுமே, இருவருமே தங்கள் பதவியில் நீடிக்க முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. அவர்களின் செயல்திறனை பரிசோதிக்க, லோக்சபா தேர்தலை காங்., மேலிடம் பயன்படுத்துகிறது.

மறு சீராய்வு


சில தொகுதிகளில் காங்., சீட்டுக்கு பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. பெங்களூரு மத்திய லோக்சபா தொகுதியிலும் பலர் சீட் கேட்கின்றனர். 2008ல் தொகுதிகள் மறு சீராய்வு செய்தபோது, பெங்களூரு மத்திய தொகுதி உருவானது. அப்போதிருந்து இத்தொகுதி பா.ஜ., வசம் உள்ளது.

கடந்த 2009, 2014, 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் மோகன் வெற்றி பெற்றார். இம்முறையும் அவரே போட்டியிடும் வாய்ப்பு உள்ளது. பா.ஜ., கோட்டையான பெங்களூரு மத்திய லோக்சபா தொகுதி மீது காங்கிரஸ் கண் வைத்துள்ளது. இந்த லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட எட்டு சட்டசபை தொகுதிகளில், காங்கிரஸ் வசம் ஐந்து தொகுதிகளும், பா.ஜ., வசம் மூன்று தொகுதிகளும் உள்ளன.

அதிக எம்.எல்.ஏ.,க்கள் வைத்துள்ளதால், பெங்களூரு மத்திய லோக்சபா தொகுதியில் எளிதில் வெற்றி பெறலாம் என, சில காங்கிரஸ் தலைவர்கள் கணக்கு போடுகின்றனர். எனவே இந்த தொகுதியில் சீட் அளிக்கும்படி மன்றாடுகின்றனர்.

முஸ்லிம்கள்


இந்த தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம். இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது நல்பாட் சீட் பெற மேலிட அளவில் முயற்சிக்கிறார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ரஹமான் கானின் மகனும், அகில இந்திய காங்., செயலருமன மன்சூர் அலிகான், கர்நாடக காங்., கமிட்டி முன்னாள் செயலர் ஹுசேன் உட்பட சிலர், சீட் பெற காய் நகர்த்துகின்றனர்.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு, பா.ஜ.,வின் மோகனுக்கு கடுமையான போட்டியாளராக இருந்த, சிவாஜிநகர் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத், இம்முறை தனக்கு சீட் கொடுத்தால் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக, மேலிடத்திடம் சமிக்ஞை கொடுத்துள்ளார்.

மேலும் சிலர் ராஜ்யசபா எம்.பி., சையத் நசீரை களமிறக்கும்படி பரிந்துரைக்கின்றனர்.

பெங்களூரு மத்திய தொகுதி தேர்தல் களத்தில் ஓட, பல குதிரைகள் ஆர்வம் காண்பித்தாலும், வெற்றி பெறும் திறன் கொண்ட குதிரையை களத்தில் இறக்க, காங்கிரஸ் மேலிடம் விரும்புகிறது.

பெண்களுக்கு வாய்ப்பு


மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், துமகூரின், நொனவினகெரே காடு சித்தேஸ்வரா மடத்தின் அஜ்ஜய்யாவின் தீவிர பக்தர். 'பெங்களூரின் மூன்று தொகுதிகளில், பெண்களை களமிறக்கினால் காங்கிரஸ் வெற்றி பெறும்' என, அஜ்ஜய்யா ஆலோசனை கூறியுள்ளார்.

எனவே மூன்று தொகுதிகளில் பெண்களுக்கு சீட் தரும்படி, சிவகுமார் பிடிவாதம் செய்ய வாய்ப்புள்ளது. ஒருவேளை இதற்கு மேலிடம் ஒப்புதல் அளித்தால், சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவின் மனைவி தபு, பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடலாம் என, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

எதிர்க்கட்சியான பா.ஜ.,வில், பெங்களூரு தெற்கு தொகுதியில் இம்முறையும் மோகனே களமிறங்க தயாராகி வருகிறார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us