மஹா.,வில் தோல்விக்கு காரணம் காங்கிரஸ்: உத்தவ் தரப்பினர் புலம்பல்
மஹா.,வில் தோல்விக்கு காரணம் காங்கிரஸ்: உத்தவ் தரப்பினர் புலம்பல்
UPDATED : நவ 28, 2024 05:15 PM
ADDED : நவ 28, 2024 05:12 PM

மும்பை: '' லோக்சபா தேர்தலுக்கு பிறகு மஹாராஷ்டிராவில் காங்கிரசின் அதீத நம்பிக்கையே தோல்விக்கு காரணம் ,'' என உத்தவ் தாக்கரே தரப்பினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியான மஹா விகாஸ் அகாடி கூட்டணி 46 தொகுதிகளில் மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை சந்தித்தது. 1-3 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், 89 தொகுதிகளில் போட்டியிட்ட உத்தவ் தாக்கரே சிவசேனா 20 தொகுதியிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 87 தொகுதியில் போட்டியிட்டு 10 ல் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
தேர்தல் முடிந்த பிறகு, எதிர்க்கட்சிகள் ஆளுக்கு ஒரு காரணத்தை கூறி வருகின்றனர். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும். சட்ட மேலவையில் எதிர்க்கட்சி தலைவருமான அம்பாதாஸ் தான்வே கூறியதாவது: லோக்சபா தேர்தலுக்கு பிறகு, ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரைப் போல் மஹாராஷ்டிராவிலும் காங்கிரஸ் அதீத நம்பிக்கையில் இருந்தது. இது தேர்தலில் பிரதிபலித்தது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் எங்களை அக்கட்சி காயப்படுத்தியது. உத்தவ் தாக்கரேவை முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தி இருக்க வேண்டும். அப்படி செய்யாதது கூட்டணியை பாதித்தது. அப்படி செய்து இருந்தால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்து இருக்கும்.
தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பதவியேற்புக்கு அவர்கள் தயாராகிவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.