
மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை நாடு கடத்தி அழைத்து வந்த விஷயத்தில், மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை நாங்கள் ஆதரித்தோம். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் ஆரம்பத்தில் நடத்திய விசாரணைகள், முயற்சிகளே, தற்போதுள்ள வெற்றிக்கு காரணம்.
திக்விஜய் சிங், ராஜ்யசபா எம்.பி., - காங்கிரஸ்
ராகுலின் அமைதி!
வக்ப் திருத்தச் சட்டம் தொடர்பாக லோக்சபாவில் நடந்த நீண்ட விவாதத்தின் போது, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் எதுவும் பேசாமல் அமைதி காத்தது ஏன்? இது சரியானதா, சிறுபான்மையினரை வஞ்சிப்பதில் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இருவருமே சமமாகத் தான் உள்ளனர்.
மாயாவதி, தலைவர், பகுஜன் சமாஜ்
தர்மமே மகிழ்ச்சி தரும்!
அன்றாட வாழ்வில் பேராசை, மோகம் போன்றவை தோன்றலாம். இவை மக்களை, அவர்களின் மதத்திலிருந்து விலகச் செய்யும். ஆனால், தர்மமே அனைவரையும் மகிழ்ச்சியை நோக்கி வழிநடத்தும். மதம் இல்லாவிட்டால், மக்கள் போதைப் பொருள் மற்றும் மதுவின் பக்கம் திரும்பலாம்.
மோகன் பகவத், தலைவர், ஆர்.எஸ்.எஸ்.,

