தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பிரதமருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்: சபாநாயகரிடம் நோட்டீஸ் வழங்கியது காங்.,

 பிரதமருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்: சபாநாயகரிடம் நோட்டீஸ் வழங்கியது காங்.,

 பிரதமருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்: சபாநாயகரிடம் நோட்டீஸ் வழங்கியது காங்.,


ADDED : ஏப் 22, 2026 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 01:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது டில்லி நிருபர் -:

'மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் மீது வேண்டுமென்றே பிரதமர் மோடி பழி சுமத்தி உள்ளார்' என கூறி, அவருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், காங்கிரஸ் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

லோக்சபா, மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, 131வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை, சமீபத்தில் நடந்து முடிந்த பார்லி., சிறப்பு கூட்டத்தொடரில் மத்திய பா.ஜ., அரசு அறிமுகப்படுத்தியது.

இதற்கு, மூன்றில் இரு பங்கு ஆதரவு கிடைக்காததால் தோல்வி அடைந்தது.

எதிர்ப்பு



இது குறித்து, நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, 'மசோதாவை தோற்கடித்த எதிர்க்கட்சியினர் பெண்களுக்கு எதிரானவர்கள்' என்றார். மேலும், எம்.பி.,க்களின் ஓட்டளிப்பு முறைகளை குறிப்பிட்டும் விமர்சித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்., பொதுச்செயலர் வேணுகோபால் சார்பில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

அதன் விபரம்:



மகளிர் மசோதா தோல்விக்கு பின், பிரதமர் மோடி பேசிய கருத்துகள், பார்லி., உரிமையை மீறுவதாகவும், எம்.பி.,க்கள் மீதான தாக்குதலாகவும் அமைந்துள்ளன.

எம்.பி.,க்களை இழிவுபடுத்தும் வகையில் அவர் பேசி உள்ளார். இது, லோக்சபா நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகளுக்கு எதிரானது.

தாக்குதல்



ஒரு எம்.பி., தன் கடமையை செய்யும் போது, அவரை கேள்வி கேட்பது என்பது, ஒரு தனிப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல; அது, பார்லி., அதிகாரத்திற்கும், ஜனநாயக உரிமைகளுக்கும் அவமானகரமானது.

பிரதமர் மோடியின் பேச்சு, எம்.பி.,க்களின் சுதந்திரம் மற்றும் நேர்மையை கேள்விக்குள்ளாக்குகிறது; அவர்கள் மீது பழி சுமத்தும் வகையில் உள்ளது. எதிர்க்கட்சிகளை விமர்சிக்க நாட்டு மக்கள் மத்தியில் பிரதமரே உரையாற்றுவது, முன்னெப்போதும் இல்லாத ஒரு நிகழ்வு.

இது, நெறிமுறையற்ற மற்றும் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம். எனவே, பிரதமர் மோடிக்கு எதிராக லோக்சபா நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதி, 222-ன் கீழ் உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us