விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு காங்கிரஸ் தலைவர் கார்கே உறுதி
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு காங்கிரஸ் தலைவர் கார்கே உறுதி
ADDED : பிப் 22, 2024 06:51 AM

கலபுரகி: “நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்,” என, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உறுதி அளித்தார்.
கலபுரகியில் நேற்று அவர் கூறியதாவது:
குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்கக் கோரி, விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை, நான் ஆதரிக்கிறேன். மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். முக்கியமான விளைச்சல்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்க வேண்டும்.
நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவோம். வரும் லோக்சபா தேர்தலுக்கு வாக்குறுதி அறிக்கை தயாரிக்கும்போது, குறைந்தபட்ச ஆதார விலை திட்டமும் இடம் பெறும்.
நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறோம். இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, பகிரங்கமாகவே நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இதுகுறித்து சட்டரீதியில் உறுதி அளிக்கப்படும். அனைத்து விளைச்சல்களுக்கும் ஆதார விலை அளிக்க முடியாது. ஆனால் அத்தியாவசியமான விளைச்சல்களுக்கு ஆதார விலை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.