ADDED : ஏப் 29, 2025 01:11 AM

பாகிஸ்தானையும், அதன் பயங்கரவாதத்தையும் எதிர்த்து போராட மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை ஒட்டுமொத்த தேசமும் சந்தேகத்திற்கிடமின்றி பாராட்டி உள்ளது. ஆனால், காங்கிரசைச் சேர்ந்த சைபுதீன் சோஸ் போன்ற தலைவர்கள், அரசின் முடிவால் கலக்கமடைந்துள்ளனர்.
அனுராக் சிங் தாக்குர்
லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
பிரதமர் வராதது ஏன்?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் நாங்கள் அனைவரும் பங்கேற்றோம். ஆனால், பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. பீஹாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு வராதது ஏன்?
மல்லிகார்ஜுன கார்கே
தலைவர், காங்கிரஸ்
தேச பக்தரா, துரோகியா?
காங்கிரசைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா தேச பக்தரா அல்லது துரோகியா என்பதை மக்கள் கண்டுபிடிக்க வேண்டும். காங்., தலைவர்கள் எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். சித்தராமையாவும் அதை தான் செய்துள்ளார்.
நிஷிகாந்த் துபே
லோக்சபா எம்.பி., - பா.ஜ.,

