தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/"வேட்பாளர்கள் கிடைக்காமல் தேடும் நிலையில் காங்.," - பிரதமர் மோடி தாக்கு

"வேட்பாளர்கள் கிடைக்காமல் தேடும் நிலையில் காங்.," - பிரதமர் மோடி தாக்கு

"வேட்பாளர்கள் கிடைக்காமல் தேடும் நிலையில் காங்.," - பிரதமர் மோடி தாக்கு


UPDATED : ஏப் 06, 2024 04:39 PM

ADDED : ஏப் 06, 2024 01:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 06, 2024 04:39 PM ADDED : ஏப் 06, 2024 01:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சஹாரான்பூர்: ‛‛ சுதந்திர போராட்ட காலத்தின் போது முஸ்லிம் லீக்கில் இருந்த அதே சிந்தனை காங்கிரஸ் கட்சியில் தேர்தல் அறிக்கையிலும் பிரதிபலிக்கிறது ' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உ.பி.,யின் சஹாரான்பூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: தேசமே முக்கியம் என்பது எங்களது நோக்கம். பா.ஜ., ஆட்சியில் கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர். ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் நாடு பின்னோக்கி சென்றது.

பா.ஜ., அக்கறை


இந்தியாவை வலிமையான நாடாக மாற்ற பா.ஜ., பணியாற்றி வருகிறது. விசுவாசத்தைப் போலவே, கொள்கைகளுக்கும் அதே முக்கியத்துவத்தை பா.ஜ., அளித்து வருகிறது. மோடியாக இருந்தாலும், யோகியாக இருந்தாலும் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம். 10 ஆண்டுகளில் விவசாயிகளின் சிறுதேவையை கூட பா.ஜ., அக்கறையுடன் நிறைவேற்றி உள்ளது. பல நாடுகளில் உரங்களின் விலை 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை நடந்த நிலையில் இந்தியாவில் ரூ.300க்கு விற்பனை ஆகிறது.

துரதிர்ஷ்டம்


‛இண்டியா ' கூட்டணி கமிஷனுக்காக பணியாற்றுகிறது. தேஜ., கூட்டணியும் , மோடி அரசும் இயக்கமாக பணியாற்றுகிறது. உறுதியற்ற மற்றும் நிச்சயமற்ற தன்மையின் பெயர் தான் ‛ இண்டியா ' கூட்டணி. தங்களது போராட்டம் மகளிருக்கு எதிரானது என ‛ இண்டியா ' கூட்டணி சவால் விடுவது துரதிர்ஷ்டம். மகளிரை அழிக்க முயன்ற அனைவருக்கும் என்ன நடந்தது வரலாறு மற்றும் புராணங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

காங்., நிலைமை மோசம்


தங்களது வெற்றிக்காக உழைக்காமல், பா.ஜ.,வை 370 தொகுதிக்கு கீழும், தே.ஜ., கூட்டணியை 400 தொகுதிகளுக்கு கீழும் வெற்றி பெற செய்யவே எதிர்க்கட்சிகள் உழைத்து வருகின்றனர். சமாஜ்வாதியும் அதுபோன்ற நிலையில் உள்ளது.

இதனால், தான் வேட்பாளர்களை அடிக்கடி மாற்றி வருகிறது. காங்கிரஸ் நிலைமை மோசம். வேட்பாளர்கள் கூட கிடைப்பது இல்லை. வேட்பாளர்களை தேடும் நிலையில் காங்கிரஸ் உள்ளது. காங்., வலிமையாக இருக்கும் இடங்களிலும் அதே நிலை.

தேர்தல் அறிக்கை


காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அது இன்றைய இந்தியாவின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பில் இருந்து விலகி உள்ளது அதன் தெளிவாக தெரியவந்துள்ளது. காங்கிரஸ கட்சியின் தேர்தல் அறிக்கையானது சுதந்திர போராட்ட காலத்தில் முஸ்லிம் லீக்கில் இருந்த அதே சிந்தனையை எதிரொலிக்கிறது.

காங்கிரசின் தேர்தல் அறிக்கையானது, முஸ்லீம் லிக்கின் முத்திரையை முழுவதுமாக தாங்கி நிற்கிறது. மீதமுள்ள பகுதியில் இடதுசாரிகளின் ஆதிக்கத்தில் உள்ளது. இதில், காங்கிரஸ் எங்கேயும் காணவில்லை.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us