ADDED : நவ 09, 2024 03:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் கமிட்டி, தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் இந்திய வரைப்படத்தை தவறாக பதிவேற்றியது சர்ச்சையை கிளப்பியது.
கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி, தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில், தேசிய அளவில், உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதம் என்றும், கர்நாடகாவில் உள்நாட்டு உற்பத்தி 10.2 சதவீதமாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தேசிய அளவில் என்ற பகுதியில், நமது நாட்டின் வரைப்படத்தில், நம் நாட்டின் காஷ்மீர் நீக்கப்பட்டிருந்தது.
இதற்கு, பா.ஐ., தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி எதிர்ப்புத் தெரிவித்தார். இவ்விஷயம், இணையதளத்தில் பெரும் விவாத பொருளாக மாறியது.
இதையடுத்து முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருடன், புதிதாக இந்திய வரைபடத்தை திருத்தி வெளியிட்டது.