தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சிறை தண்டனை பெற்ற காங்., - எம்.எல்.ஏ., தகுதி நீக்கம்

 சிறை தண்டனை பெற்ற காங்., - எம்.எல்.ஏ., தகுதி நீக்கம்

 சிறை தண்டனை பெற்ற காங்., - எம்.எல்.ஏ., தகுதி நீக்கம்


ADDED : ஏப் 04, 2026 01:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 01:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போபால்: வங்கி மோசடி வழக்கில் தண்டனை பெற்றதை அடுத்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜேந்திர பாரதி, மத்திய பிரதேச சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

ம.பி.,யின் ததியா தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் ராஜேந்திர பாரதி, 67. இவர், 1998ல், மாவட்ட கூட்டுறவு வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் தலைவராக இருந்தபோது, வங்கி ஆவணங்களை திருத்தி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால், வங்கிக்கு 18 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த டில்லி சிறப்பு நீதிமன்றம், நேற்று முன்தினம் ராஜேந்திர பாரதிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

இதையடுத்து, மத்திய பிரதேச சட்டசபையில் இருந்து ராஜேந்திர பாரதி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான அறிவிப்பை ம.பி., சட்டசபை முதன்மை செயலர் அரவிந்த் சர்மா நேற்று வெளியிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us