சைத்ராவுக்கு அரசு வேலை காங்., - எம்.எல்.ஏ., முயற்சி
சைத்ராவுக்கு அரசு வேலை காங்., - எம்.எல்.ஏ., முயற்சி
ADDED : ஜன 26, 2025 10:56 PM

மைசூரு: ''கோ கோ இந்திய அணி வீராங்கனை சைத்ராவுக்கு, அரசு வேலை வாங்கி தர முயற்சிப்பேன்,'' என காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுனில் போஸ் தெரிவித்தார்.
'கோ கோ' உலக கோப்பையை வென்ற மகளிர் அணியில், மைசூரை சேர்ந்த சைத்ரா இடம் பெற்றிருந்தார். நேற்று முன்தினம் மாலை மைசூரு டி.நரசிபுராவில் உள்ள குருபூர் கிராமத்திற்கு வந்த சைத்ராவுக்கு, கிராமத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நேற்று காலை சைத்ராவை, அமைச்சர் வெங்கடேஷ், காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுனில் போஸ் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர். அவருக்கு தங்க செயின் பரிசளித்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:'சைத்ராவுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும்' என்று கிராம மக்கள் கேட்டு கொண்டனர். முதல்வரை சந்தித்து, அதிக தொகை கொடுக்க கோரிக்கை வைப்பேன். சைத்ராவும், அரசு வேலை தருமாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக எனது தந்தையிடம் பேசி, அவருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க முயற்சிப்பேன்.
டி.நரசிபுராவில் மைதானம் கட்ட இடம் தேடி வருகிறோம். இதனால் உள்ளூர் விளையாட்டு வீரர்கள் பயனடைவர். சித்தராமையாவே ஐந்து ஆண்டுகள் முதல்வராக நீடிப்பார். இரண்டரை ஆண்டுகள் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் செய்து கொண்டதாக தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் வெங்கடேஷ் கூறுகையில், ''மக்களுக்கு எதிராக ஈடுபட்டு, கட்டாய பணம் வசூலிக்கும் மைக்ரோ பைனான்ஸ் ஆட்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான புதிய சட்டம் கொண்டு வரப்படும். காங்கிரசில் சேரும் ஸ்ரீராமுலுவுக்கு அழைப்பு விடுத்தது உண்மை. ஆனால் இப்போது அழைக்கவில்லை,'' என்றார்.

