இறந்தவர்களுடன் டீ குடிக்கும் வாய்ப்பு; தேர்தல் ஆணையத்துக்கு நன்றி சொன்ன ராகுல்
இறந்தவர்களுடன் டீ குடிக்கும் வாய்ப்பு; தேர்தல் ஆணையத்துக்கு நன்றி சொன்ன ராகுல்
ADDED : ஆக 13, 2025 08:44 PM

புதுடில்லி: இறந்தவர்களோடு டீ குடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி என்று காங்கிரஸ் எம்பி ராகுல் தெரிவித்துள்ளார்.
லோக்சபா மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டினார். போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள் என அடுக்கடுக்கான புகார்களை கூறி, ஆவணங்களை வெளியிட்டார்.
அவரது இந்தக் குற்றச்சாட்டு குறித்து ராகுல் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அடுத்தடுத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆனால், தனது குற்றச்சாட்டுகளில் இருந்து பின்வாங்க மறுத்து வரும் ராகுல், தற்போது தேர்தல் ஆணையத்தை கிண்டல் செய்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வாக்காளர் பட்டியல் இருந்து நீக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் ராகுல் அமர்ந்து டீ குடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அந்த வீடியோவுடன், 'வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்திருக்கின்றன. இறந்தவர்களுடன் டீ குடிக்கும் வாய்ப்பு எனக்கு இதுவரை கிடைத்ததில்லை. தற்போது அது நிகழ்ந்துள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்துக்கு நன்றி,' என ராகுல் பதிவிட்டுள்ளார்.