காங். எம்.பி சுதா தங்க சங்கிலியை பறித்தவர் கைது: டில்லி போலீஸ் அறிவிப்பு
காங். எம்.பி சுதா தங்க சங்கிலியை பறித்தவர் கைது: டில்லி போலீஸ் அறிவிப்பு
ADDED : ஆக 06, 2025 11:42 AM

புதுடில்லி; டில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதா தங்க சங்கிலியை பறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை காங்கிரஸ்எம்பியான சுதா, திங்கள்கிழமை காலையில் சாணக்யபுரியின் சாந்திபாத் பகுதியில் நடைபயிற்சி சென்று கொண்டு இருந்தார். அப்போது ஸ்கூட்டரில் வந்த மர்ம நபர், அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றார்.
நடந்த சம்பவத்தை விரிவாக விளக்கி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுதா எம்.பி., உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தற்போது சம்பந்தப்பட்ட குற்றத்தை செய்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார் என்று டில்லி காவல்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ் வலைதள பதிவில் டில்லி காவல்துறை கூறி உள்ளதாவது; எம்.பி.யின் சங்கிலியைப் பறித்த வழக்கு தீர்க்கப்பட்டுள்ளது.குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு, சங்கிலி மீட்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் விரைவில் பகிரப்படும்.
இவ்வாறு அந்த வலைதள பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.