ADDED : ஏப் 26, 2026 11:38 PM

காங்கிரஸ், நாடு முழுதும் எழுச்சி அடைந்துள்ளது. கேரளா, அசாமில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். பா.ஜ., கூட்டணிக்கு தமிழகம், மேற்கு வங்கத்தில் தோல்வியே கிடைக்கும். காங்கிரஸ் வளர்ச்சி கண்டாலும், மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரசே மீண்டும் ஆட்சி அமைக்கும்.
ஹரிஷ் ராவத் உத்தரகண்ட் முன்னாள் முதல்வர், காங்கிரஸ்
தேர்தல் கமிஷன் தோல்வி!
தேர்தல் நடக்கும்போதெல்லாம் மேற்கு வங்கத்தில் பதற்றமான சூழலே நிலவுகிறது. சட்டசபை தேர்தலையொட்டி லட்சக்கணக்கான மத்திய படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையிலும் வன்முறை சம்பவங்கள் நடப்பது தேர்தல் கமிஷனின் தோல்வியை காட்டுகிறது. எ னவே, தேர்தல் கமிஷன் மேலும் விழிப்புடன் செயல்படவேண்டும்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மூத்த தலைவர், காங்.,
முடிவுக்கு வரும் அராஜகம்!
பல ஆண்டுகளாக நிலவும் அட்டூழியங்கள் மற்றும் அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வர, மேற்கு வங்க மக்கள் மாற்றத்தை விரும்புகின்ற னர். இந்த தேர்தலில் இந்த மாற்றம் உறுதியாக ஏற்படும். பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அங்கு நிச்சயம் அதிகாரத்தை கைப்பற்றும்.
பீயூஷ் கோயல் மத்திய அமைச்சர், பா.ஜ.,
