கட்சிக்கு எதிராக களமிறங்கிய 13 பேரை நீக்கி காங்., உத்தரவு
கட்சிக்கு எதிராக களமிறங்கிய 13 பேரை நீக்கி காங்., உத்தரவு
ADDED : செப் 27, 2024 08:17 PM
சண்டிகர்:ஹரியானா சட்டசபைத் தேர்தலில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடும் 13 பேரை, கட்சியில் இருந்து நீக்கி ஹரியானா மாநில காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் ஹரியானா மாநிலத் தலைவர் உதய் பன் வெளியிட்டுள்ள உத்தரவு:
சட்டசபைத் தேர்தலில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து 13 பேர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய நரேஷ் தாண்டே, பர்தீப் கில், சஜ்ஜன் சிங் துல், சுனிதா பட்டன் , ராஜீவ் மாமுரம் கோந்தர், தயாள் சிங் சிரோஹி, விஜய் ஜெயின், தில்பாக் சண்டில், அஜித் போகத், அபிஜீத் சிங், சத்பீர் ரதேரா, நிது மான் மற்றும் அனிதா துல் ஆகிய 13 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனர். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஹரியானா சட்டசபைத் தேர்தல் அக்டோபர் 5ம் தேதி நடக்கிறது.