வயநாடு முதல் தேர்தலில் முத்திரை...! மக்களின் 'ப்ரியமான' பிரியங்கா
வயநாடு முதல் தேர்தலில் முத்திரை...! மக்களின் 'ப்ரியமான' பிரியங்கா
UPDATED : நவ 24, 2024 08:20 AM
ADDED : நவ 23, 2024 08:26 AM
முழு விபரம்

வயநாடு: வயநாடு எம்.பி., இடைத்தேர்தலில் காங். வேட்பாளர் பிரியங்காவின் 4,10,931 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு நிகரான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தொகுதி வயநாடு. அண்மையில் முடிந்த லோக்சபா தேர்தலில் 2 தொகுதிகளில் களம் கண்ட ராகுல், அவற்றில் ஒன்றான வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதியில் ராகுலின் சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா போட்டியிட்டார்.
வயநாட்டுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுடன் சேர்த்து ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இன்று ஓட்டு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே பிரியங்கா முன்னிலையில் இருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ், இடதுசாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூ.வேட்பாளர் சத்யன் மொகேரி ஆகியோர் ஆரம்பம் தொட்டே பின்னடைவில் இருந்தனர்.
குறிப்பாக பிரியங்கா பெற்ற ஓட்டுகள் பற்றிய விவரங்களே முதல்கட்டமாக வெளியாகின. கிட்டத்தட்ட 10 ஆயிரம் ஓட்டுகளை பிரியங்கா கடந்த பின்னரே மற்ற எதிர்க்கட்சி வேட்பாளர்களின் ஓட்டு நிலவரங்கள் என்ன என்பது பற்றிய தகவல்கள் வெளியாகின.பிரியங்கா ஒரு லட்சம் ஓட்டுகள் பெற்ற விவரங்கள் அறிவிக்கப்பட்ட போது, நவ்யா ஹரிதாஸ் 11 ஆயிரம் ஓட்டுகளும், சத்யன் மொகேரி 37 ஆயிரம் ஓட்டுகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
முடிவில் பிரியங்கா, 4,10,931 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு 6,22,338 ஓட்டுக்கள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரிக்கு 2,11,407 ஓட்டுக்களும்பா.ஜ.,வின் நவ்யா ஹரிதாசுக்கு 1,09,939 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்தன. மற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் டெபாசிட் பறிபோனது.
வயநாடு தொகுதியில் ராகுல் களம் கண்ட போது 6,47,445 ஓட்டுகள் பெற்றார். 3,64,422 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கினார்.
தற்போது பிரியங்கா, கூடுதலாக 46,509 ஓட்டுக்கள் பெற்று இமாலய வெற்றி பெற்றுள்ளார்.