அமெரிக்காவுடன் ஒப்பந்தங்கள் ரத்து செய்ய கோரி காங்., போராட்டம்
அமெரிக்காவுடன் ஒப்பந்தங்கள் ரத்து செய்ய கோரி காங்., போராட்டம்
ADDED : மார் 17, 2026 02:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி, மத்திய அரசுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, இளைஞர் காங்கிரசார் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் தலைமையில் நடந்த இந்த ஆர்ப் பாட்டத்தில், பல மாநிலங்களில் இருந்து வந்திருந்தவர்கள் பங்கேற்றனர்.
அதில் பங்கேற்றவர்கள், 'இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தங்களை ரத்து செய்' என்ற பதாகைகளை ஏந்தி வந்தனர். பார்லிமென்ட் வளாகம் நோக்கி செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்து, பின் விடுவித்தனர்.
அந்த பகுதியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாத வண்ணம், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

