ADDED : பிப் 06, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து காங்கிரஸ் எம்.பி., பிரமோத் திவாரி கூறியது:
டில்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ஆம் ஆத்மி, பா.ஜ., ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே எதிராக இருக்கும். ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கணக்கெடுப்புகளை நாங்கள் நம்பவில்லை. காங்கிரஸ் சிறப்பான வெற்றி பெறும் என்று நாங்கள் நம்புகிறோம். மக்களின் தீர்ப்பு இரு கட்சிகளுக்கும் எதிராக இருக்கும். ஏனெனில் அவர்கள் காற்று மாசுபாடு மற்றும் யமுனா உள்ளிட்ட பிரச்னைகளில் சரியாக செயல்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
-நமது நிருபர் -

