
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரிவினையின் போது காங்கிரஸ் செய்த தவறால், அண்டை நாடான வங்கதேசத்தில் தலித் மக்கள் கஷ்டப்படுகின்றனர். அங்கு உள்ள ஹிந்துக்களில் பெரும்பாலானோர் ஏழை தலித் மக்கள். அவர்களுக்காக வாய் திறக்காத காங்கிரஸ், சம்பல் பிரச்னையில் முஸ்லிம்களை தாஜா செய்கிறது.
மாயாவதி, தலைவர், பகுஜன் சமாஜ்
அரசு என்ன செய்தது?
வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க மத்திய அரசு என்ன செய்தது? இந்திரா பிரதமராக இருந்த போது இதுபோன்ற சூழ்நிலையை திறமையாகக் கையாண்டார். அதேபோல் மத்திய அரசு ஏதாவது செய்ய வேண்டும்.
ஆதித்யா தாக்கரே, எம்.எல்.ஏ., சிவசேனா உத்தவ் அணி
ஒன்றிணைய வேண்டும்!
வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுக்க, நம் நாட்டில் உள்ள ஹிந்துக்கள் கட்சி வித்தியாசமின்றி ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்னையை தீர்க்க முடியும்.
லாக்கெட் சாட்டர்ஜி, முன்னாள் எம்.பி., - பா.ஜ.,