காங்கிரஸ் மூழ்கும் படகு: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி விளாசல்
காங்கிரஸ் மூழ்கும் படகு: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி விளாசல்
ADDED : பிப் 13, 2024 05:46 PM

புதுடில்லி: மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் பா.ஜ.,வில் இணைந்தது குறித்து நிருபர்கள் கேள்விக்கு, காங்கிரஸ் மூழ்கும் படகு என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதில் அளித்தார்.
டில்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது: விவசாயிகள் கோரிய பெரும்பாலான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி உள்ளது. மீதமுள்ள கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பியூஷ் கோயல், நித்யானந்த் ராய் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
காங்., மூழ்கும் படகு
மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் பா.ஜ.,வில் இணைந்தது குறித்து பிரகலாத் ஜோஷி கூறியதாவது: காங்கிரஸ் மூழ்கும் படகு. காங்கிரஸ் கட்சித் தலைமை மீது அவரது கட்சியினர்களுக்கே நம்பிக்கை இல்லை. இதனால் காங்கிரசில் இருந்து மூத்த தலைவர்கள் விலகி வருகின்றனர் என்றார்.