தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பொய்களை பரப்பும் காங்கிரஸ்!

பொய்களை பரப்பும் காங்கிரஸ்!

பொய்களை பரப்பும் காங்கிரஸ்!


ADDED : ஜன 20, 2026 07:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 07:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' திட்டம் குறித்து காங்., தலைவர்கள் கார்கே, ராகுல் ஆகியோர் பொய் தகவல்களை பரப்புகின்றனர். இச்சட்டத்தை எதிர்ப்பதால், தங்கள் கட்சியை அவர்களால் வலுப்படுத்த முடியாது. மாறாக, பலவீனமடைய செய்கின்றனர். இதன் மூலம் கிராமப்புற வேலைவாய்ப்பை வலுப்படுத்தியுள்ளோம்.

- சிவ்ராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர், பா.ஜ.,

மும்பைக்கு மஹாயுதி மேயர்!

மும்பை மாநகராட்சிக்கு மஹாயுதி கூட்டணியைச் சேர்ந்த மேயர் கிடைப்பார். மற்ற உள்ளாட்சி அமைப்புகளிலும் இதே முடிவு தான். மக்கள், இக்கூட்டணிக்கு நம்பிக்கையுடன் ஓட்டளித்துள்ளனர். அந்த நம்பிக்கையை நாங்கள் மதிக்கிறோம். மக்களின் முடிவை மீறும் எந்த நடவடிக்கையும் சிவசேனா எடுக்காது.

- ஏக்நாத் ஷிண்டே, மஹா., துணை முதல்வர், சிவசேனா

காஷ்மீரி பண்டிட்களுக்கு வரவேற்பு!

ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த காஷ்மீரி பண்டிட்கள், இங்குள்ள தங்கள் வீடுகளுக்கு திரும்புவதை எப்போதும் வரவேற்கிறோம். யாரும் அவர்களை தடுக்கவில்லை. இது, அவர்களின் வீடு; அவர்கள் திரும்பி வர வேண்டும். அவர்களுக்கு, அரசு சார்பில் வீடு கட்டித் தரப்படுவதுடன், ஆதரவும் அளிப்போம்.

- பரூக் அப்துல்லா, தலைவர், தேசிய மாநாட்டு கட்சி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us