ADDED : ஏப் 01, 2024 11:20 PM

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு அனுப்பியும், பங்கேற்காமல் காங்கிரஸ் தவறான முடிவு எடுத்தது. இதனால் காங்., தலைவர்கள் பலரும் மக்களுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் தவித்ததாக அக்கட்சியைச் சேர்ந்தவர்களே என்னிடம் கூறினர்.
சிவ்ராஜ் சிங் சவுகான், ம.பி., முன்னாள் முதல்வர், பா.ஜ.,
ராஜினாமா செய்யாதது ஏன்?
ஊழல்வாதிக்கு ஆதரவாக, 'இண்டியா' கூட்டணி கட்சியினர் டில்லியில் போராட்டம் நடத்தி உள்ளனர். கெஜ்ரிவாலை நிரபராதியைப் போல் சித்தரிக்கின்றனர். ஊழல் வழக்கில் கைதாகி சிறை சென்ற பின்னும், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாதது ஏன்?
சுதன்ஷு திரிவேதி, எம்.பி., - பா.ஜ.,
ராகுலை தண்டியுங்கள்!
காங்கிரஸ் எம்.பி., ராகுல் இந்த லோக்சபா தேர்தலை, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட போட்டி என கூறியுள்ளார். மத்திய அரசு தன் அதிகாரிகளை தேர்தல் கமிஷனில் நியமித்துள்ளது என்றும், ஓட்டுப்பெட்டிகளின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மீது நடவடிக்கை தேவை.
ஹர்தீப் சிங் பூரி, மத்திய அமைச்சர், பா.ஜ.,

