ADDED : ஏப் 29, 2024 12:14 AM

மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் மார்க்சிஸ்ட் கூட்டணி வைத்துள்ளது. இங்கு பா.ஜ.,வின் இரு கண்களாக காங்கிரசும், மார்க்சிஸ்ட்டும் திகழ்கின்றன. இந்த இரு கட்சிகளுக்கும் ஓட்டுபோட்டால், அது மோடிக்கு ஓட்டு போடுவதற்கு சமம்.
- மம்தா பானர்ஜி, மே.வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
பயங்கரவாதிகளுக்கு பரிவு!
மத்தியில் வலிமையற்ற அரசு அமைய வேண்டும் என மம்தா பானர்ஜி விரும்புகிறார். அவரது ஓட்டு வங்கி அரசியல், ஊடுருவல்காரர்களுக்கு சாதகமாக உள்ளது. பயங்கரவாதிகள் மீது பரிவு காட்டுபவராக மம்தா உள்ளார்.
- நட்டா, தேசிய தலைவர், பா.ஜ.,
இல்லாதவற்றை பேசுகிறார்!
காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இல்லாத வார்த்தைகளை பிரதமர் மோடி கண்டுபிடித்து பேசி வருகிறார். அவரது மோசமான பேச்சுக்களை எழுதி தரும் நபரே, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை எழுதியிருப்பதாக அவர் கற்பனை செய்து கொள்கிறார்.
- சிதம்பரம், மூத்த தலைவர், காங்கிரஸ்
