உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு வரிச் சலுகை கொடுங்கள்; பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு வரிச் சலுகை கொடுங்கள்; பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
ADDED : டிச 18, 2024 11:57 AM

புதுடில்லி: 'உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு வரிச் சலுகை கொடுக்க வேண்டும்' என பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் எம்.பி., சுதா கடிதம் எழுதியுள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். குகேஷ்க்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சாம்பியன்ஷிப் மூலம் குகேஷுக்கு கிடைக்கும் வருமானம் 11.34 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த தொகைக்கு அவர் செலுத்த வேண்டிய வரி ரூ.4.67 கோடியாகும்.பொதுவாக, ரூ.5 கோடிக்கும் அதிகம் சம்பாதிப்பவர்களுக்கு 37 சதவீதம் கூடுதல் கட்டணம், 4 சதவீதம் சுகாதாரம் மற்றும் கல்வி வரி என மொத்தமாக 42 சதவீதம் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த சூழலில், குகேஷ்க்கு வரிச் சலுகை கொடுக்க வேண்டும்' என கோரிக்கை வலுத்து வருகிறது. குகேஷ்க்கு வரிச் சலுகை கொடுக்க வேண்டும்' என பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் எம்.பி., சுதா கடிதம் எழுதியுள்ளார்.
அவர் கடிதத்தில் கூறிருப்பதாவது: குகேஷ் பரிசுத் தொகை ரூ.11 கோடியில், ரூ.4 கோடி வரியாகச் செலுத்தும் நிலை உள்ளது, வரிச்சலுகை வேண்டும். உலக சாதனையை உரிய வகையில் கவுரவிக்க வேண்டும். காங்., ஆட்சியில் விளையாட்டு வீரர்களுக்கு வரிச்சலுக்கை அளிக்கப்பட்டது. வரிச்சலுகை வழங்கினால் இளம் வீரர்களை ஊக்குவிப்பதாக அமையும்.
அதே போல் குகேஷின் சாதனையை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசு வழியில் மத்திய அரசும் பரிசுத் தொகை அறிவிக்க வேண்டும். உலக சாதனையை உரிய முறையில் கவுரவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஏற்கனவே, குகேஷ்க்கு வரி சலுகை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பி வருகின்றனர்.