ADDED : நவ 29, 2024 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு; ஷிகாவி, சண்டூர், சென்னப்பட்டணா தொகுதிகளில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்த, காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவின் சண்டூர், ஷிகாவி, சென்னப்பட்டணா என, மூன்று தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் அமோக வெற்றி அடைந்தது.
எனவே வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க, கட்சி முடிவு செய்துள்ளது. டிசம்பர் 8ம் தேதி ஷிகாவி, சண்டூரிலும்; டிசம்பர் 14ல், சென்னப்பட்டணா தொகுதியிலும் நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்த, தலைவர்கள் தயாராகின்றனர்.
கூட்டத்தில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட அமைச்சர்கள், தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
சென்னப்பட்டணாவில் நடக்கும் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்கும்படி, முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து யோகேஸ்வர் அழைப்பு விடுத்து உள்ளார்.