UPDATED : பிப் 15, 2024 01:10 PM
ADDED : பிப் 15, 2024 12:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: நாட்டின் கனவுகளுக்கு காங்கிரஸ் நீதி வழங்கும் என அக்கட்சி எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி புதிய உத்தரவாதங்களுக்கு முன், பழைய உத்தரவாதங்களை' கணக்கிட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலைகள் வழங்கப்படும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப்படும்.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கப்படும் உள்ளிட்ட அனைத்து உத்தரவாதங்களும் பொய்யானவை. பா.ஜ., என்பது பொய்க்கும் அநீதிக்கும் உத்தரவாதம். நாட்டின் கனவுகளுக்கு காங்கிரஸ் நீதி வழங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் தெரிவித்துள்ளார்.

