ஒருவரோடு ஒருவர் சண்டையிட வைப்பதே காங்., குணம்: விளாசினார் பிரதமர் மோடி
ஒருவரோடு ஒருவர் சண்டையிட வைப்பதே காங்., குணம்: விளாசினார் பிரதமர் மோடி
ADDED : நவ 09, 2024 02:22 PM

மும்பை: 'வெவ்வேறு ஜாதியினரை ஒருவரோடு ஒருவர் சண்டையிட வைப்பதே காங்கிரசின் குணம்' என பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நவ.,20ம் தேதி நடக்க உள்ள தேர்தலில் பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளிக்குமாறு ஆசிர்வாதம் வாங்க வந்துள்ளேன். மஹாராஷ்டிரா மக்களுக்கு பா.ஜ., மீது நம்பிக்கை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.,வை முழு மனதுடன் ஆதரித்துள்ளீர்கள். பா.ஜ.., மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, நாட்டின் மீது அவர்களுக்குள்ள அன்பு மற்றும் அரசியல் பற்றிய புரிதலின் காரணமாகும். வெவ்வேறு ஜாதியினரை ஒருவரோடு ஒருவர் சண்டையிட வைப்பதே காங்கிரசின் குணம்.
எஸ்.சி., மற்றும் பழங்குடியின சமூகங்களை வெவ்வேறு ஜாதிகளாக காங்கிரஸ் பிரித்தது. காங்கிரஸ் ஆட்சி எங்கு அமைந்தாலும், அந்த மாநிலம் அக்கட்சியின் ஏ.டி.எம்., ஆக மாறும். மஹாராஷ்டிராவை காங்கிரசின் ஏ.டி.எம்., ஆக மாற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மகா அகாஸ் விகாடி என்றால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் செய்வது தான் அர்த்தம். 2019ம் ஆண்டு இதே நாளில் நாட்டின் உச்சநீதிமன்றம் ராமர் கோவில் தொடர்பான தீர்ப்பை வழங்கியது. இந்த நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.