ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி; தெய்வாதீனமாக தடுத்து நிறுத்தம்
ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி; தெய்வாதீனமாக தடுத்து நிறுத்தம்
ADDED : ஜூன் 18, 2025 12:43 AM

சேலம்: ஈரோட்டில் இருந்து சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க நடந்த சதி ரயில் இன்ஜின் டிரைவரின் முன்னெச்சரிக்கையான நடவடிக்கையால் தடுத்து நிறுத்தப்பட்டது.
ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோட்டில் இருந்து சென்னை வரை இயக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை நேற்று இரவு ஈரோட்டில் இருந்து புறப்பட்ட ரயில், சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை கடந்து சென்ற போது தடதடவென சத்தம் கேட்டது. உஷாரான ரயில் இன்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.
இறங்கிச் சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் இரும்பு ராடு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ரயில் அதே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
ரயிலை கவிழ்க்கும் நோக்கத்துடன் மர்ம நபர்கள் சதி வேலை செய்திருப்பதை புரிந்து கொண்ட ரயில் என்ஜின் டிரைவர் ரயில்வே அதிகாரிகளுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்தில் விசாரணை நடந்து வருகிறது.