தொகுதி மறுசீரமைப்பு.... தென்மாநிலங்களுக்கு இழப்பு தான் என்கிறார் ப.சி.,
தொகுதி மறுசீரமைப்பு.... தென்மாநிலங்களுக்கு இழப்பு தான் என்கிறார் ப.சி.,
ADDED : மே 23, 2026 10:09 PM

சென்னை: மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களுக்கு இழப்பு என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு, மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட மசோதாக்கள், கடந்த மாதம் லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பெரும்பான்மை ஆதரவு கிடைக்காததால் தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களுக்கு இழப்பு என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில்; லோக் சபாவின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை எதுவாக இருந்தாலும் (543 அல்லது 815), அரசின் தொகுதி மறுவரையறை திட்டத்தின் கீழ், லோக் சபாவின் ஐந்து தென் மாநிலங்களின் விகிதாசார பிரதிநிதித்துவப் பங்கு சுமார் 24.3%-லிருந்து சுமார் 20.7%-ஆக குறையும்.
மேலும், அந்த 5 மாநிலங்கள் ஒவ்வொன்றும் லோக்சபாவில் தங்களின் பிரதிநிதித்துவ விகிதத்தில் சரிவைக் காணும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
