ADDED : ஜன 26, 2024 11:51 PM
குடியரசு தினத்தை முன்னிட்டு, சிக்கமகளூரின் சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டு மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் அணிவகுப்பு நடந்தது. இதில் அரசியலமைப்பு அலங்கார ஊர்தி, அனைவரையும் கவர்ந்தது
விஜயபுரா, இன்டியின், ஹிரேரோகி கிராம பஞ்சாயத்து வளாகத்தில் நேற்று குடியரசு தின நிகழ்ச்சி நடந்தது. கொடியேற்றிய பின், கிராம பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர் மல்லு கின்னி, வானத்தை நோக்கி, துப்பாக்கியால் சுட்டார். பின் கீழே வைக்கும்போது, எதிர்பாராமல் துப்பாக்கி வெடித்து, கிராம பஞ்சாயத்து தலைவி சோமவ்வாவின் காலில் குண்டு பாய்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்
குடியரசு தினமான நேற்று, ஆரூடம் கணித்த கோடி மடாதிபதி சிவயோகி ராஜேந்திர சுவாமிகள், '2024ல் கனமழை பெய்யும். குண்டு வெடிப்பு நடக்கும் வாய்ப்புள்ளது. யுத்த பீதி எழுந்துள்ளது. நில நடுக்கம், தண்ணீரால் கண்டம் ஏற்படலாம். கொலைகள் நடக்கும்,' என கூறி பீதியை கிளப்பி உள்ளார்.

