sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நம்பிக்கையை தரும் அரசியலமைப்பு சட்டம்: பார்லியில் பிரியங்கா பேச்சு

/

நம்பிக்கையை தரும் அரசியலமைப்பு சட்டம்: பார்லியில் பிரியங்கா பேச்சு

நம்பிக்கையை தரும் அரசியலமைப்பு சட்டம்: பார்லியில் பிரியங்கா பேச்சு

நம்பிக்கையை தரும் அரசியலமைப்பு சட்டம்: பார்லியில் பிரியங்கா பேச்சு

39


UPDATED : டிச 13, 2024 02:42 PM

ADDED : டிச 13, 2024 02:41 PM

Google News

UPDATED : டிச 13, 2024 02:42 PM ADDED : டிச 13, 2024 02:41 PM

39


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு உரிமைகளை பெற்றுத் தந்துள்ளது' என பார்லிமென்டில் பிரியங்கா பேசினார். இது பார்லிமென்டில் அவரது முதல் உரை.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ., 25ம்தேதி தொடங்கியது. இன்று (டிச.,13) அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதம் நடந்தது. அப்போது, லோக்சபாவில் வயநாடு எம்.பி., பிரியங்கா பேசியதாவது: அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு உரிமைகளை பெற்றுத் தந்துள்ளது. அம்பேத்கர், அபுல் கலாம் ஆசாத், ராஜாஜி பங்களிப்புடன் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. எவ்வளவோ சவால்கள் இருந்தும் மகளிர் போராட அரசியல் சாசனம் தைரியம் தருகிறது. அரசியலமைப்பு சட்டத்தின் பலனால் எளியோர் போராட முடிகிறது.

இட ஒதுக்கீடு

மத்திய அரசு வாஷிங் மெஷின் அரசு. ஹிமாச்சல்லில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்தது யார்? கோவா அரசை கவிழ்த்தது யார்? எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடக நண்பர்கள் மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறையை பயன்படுத்தி தவறான வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. தனியார்மயமாக்கல் உள்ளிட்டவை மூலம் இந்த அரசு இட ஒதுக்கீட்டை பலவீனப்படுத்த முயற்சிக்கிறது. நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மக்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என்பதை இந்த தேர்தலில் தெரிந்து கொண்டார்கள்.

கோடிக்கணக்கான இந்தியர்களின் போராடி வருகின்றனர். அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை நமது அரசியலமைப்பு சட்டம் தருகிறது. நமது அரசியலமைப்பு சட்டம் நாட்டு மக்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசம், அது நீதி, ஒற்றுமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் கவசம் என்பதை நான் புரிந்துகொண்டேன். வருத்தமான விஷயம் என்னவென்றால், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்புக் கவசத்தை உடைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு உள்ளனர். இவ்வாறு பிரியங்கா பேசினார்.






      Dinamalar
      Follow us