அரசியலமைப்பு சட்டம் சக்தி வாய்ந்த கருவி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட்
அரசியலமைப்பு சட்டம் சக்தி வாய்ந்த கருவி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட்
ADDED : ஆக 08, 2024 08:15 AM

புதுடில்லி: இந்திய அரசியலமைப்பு சட்டம் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை கட்டுப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த கருவி என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
குளோபல் பல்கலை 13வது பட்டமளிப்பு விழாவில், சந்திரசூட் பேசியதாவது: மாணவர்கள் நம்மை சுற்றி நடக்கும் அநீதியைக் கண்டறிய வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் கல்வி கற்கும் துறையில், மாற்றத்தை கொண்டு வரும் திறனை கொண்டுள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டம் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை கட்டுப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த கருவி.
இரக்கமுள்ள கண்
நீதி வழங்குவதற்கு, சுற்றியுள்ள அநீதியைக் கண்டறிவதற்கு இரக்கமுள்ள கண் தேவை. காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்க தெளிவான பதில்கள் இல்லை. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக இருந்தாலும் நாங்கள் எங்கள் நேரத்தை, வெவ்வேறு வழிகளில் கற்கவும் செலவிடுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.