தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ நுகர்வு குறைந்துள்ளது!

நுகர்வு குறைந்துள்ளது!

நுகர்வு குறைந்துள்ளது!


ADDED : அக் 31, 2024 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2024 01:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு நாட்டின் வளர்ச்சி, அந்நாட்டு மக்களின் நுகர்வு வளர்ச்சியை வைத்து மதிப்பிடப்படும். பா.ஜ., ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டு மக்களின் நுகர்வு குறைந்து வருகிறது. இது பொருளாதாரத்துக்கு நல்லதல்ல. விலைவாசி உயர்வு, சம்பளம் உயராதது மற்றும் ஏற்றத்தாழ்வு ஆகியவையே இதற்கு காரணம்.

ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்.,



வாக்கு தவறிவிட்டனர்!


ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் டில்லியில் அமல்படுத்தப்படும் என முன்னாள் டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சட்டசபையில் கூறினார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதனால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.

வீரேந்திர சச்தேவா, டில்லி மாநில தலைவர், பா.ஜ.,



பொய்கள் அம்பலமாகின!


ஹரியானா தேர்தல் நடவடிக்கை குறித்து காங்கிரஸ் கூறிய பொய்களை தேர்தல் ஆணையம் அம்பலப்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக தேர்தல் நடவடிக்கைகள் மீது சந்தேகத்தை உருவாக்க நினைத்த காங்கிரசின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுஉள்ளன.

நயாப் சிங் சைனி, ஹரியானா முதல்வர், பா.ஜ.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us