தொடருது ரயில் விபத்துகள்: மத்திய அரசை சாடிய மம்தா
தொடருது ரயில் விபத்துகள்: மத்திய அரசை சாடிய மம்தா
UPDATED : ஜூலை 30, 2024 11:23 AM
ADDED : ஜூலை 30, 2024 11:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பா.ஜ., ஆட்சியில் அதிக ரயில் விபத்துக்கள் நடக்கிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில், மம்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்கர்சவான் ரயிவே ஸ்டேஷன் அருகே பயங்கர ரயில் விபத்து நடந்துள்ளது. பலர் காயம் அடைந்துள்ளனர்.இது சோகமான நிகழ்வு.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். நான் கேள்வி கேட்கிறேன்? இது தான் ஆட்சியா? ஏறக்குறைய ஒவ்வொரு வாரமும் ரயில் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதை எவ்வளவு காலம் பொறுத்துக்கொள்ள முடியும்? இந்த அரசின் அடாவடித்தனத்திற்கு முடிவே இல்லையா?. இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.