தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இந்தியர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை

 இந்தியர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை

 இந்தியர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை


ADDED : மார் 05, 2026 02:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 02:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் காரணமாக, மேற்காசிய நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு உதவ, நம் வெளியுறவு அமைச்சகம் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேல், அமெரிக்காவுடன் சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வசிக்கும் நுாற்றுக்கணக்கான இந்திய மாணவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு ஈரானில் உள்ள இந்திய துாதரகம் அனுப்பி வைத்துள்ளது.

மேற்காசியாவில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், சவுதி உள்ளிட்ட நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து, அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு உதவ நம் வெளியுறவு அமைச்சகம் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.

'காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை இந்த கட்டுப்பாட்டு அறை இயங்கும். 1800118797 என்ற இலவச எண்ணிலும், +911123012113, +911123014104, +911123017905 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us