சர்ச்சை கருத்து விவகாரம்: ராகுலுக்கு கோர்ட் சம்மன்
சர்ச்சை கருத்து விவகாரம்: ராகுலுக்கு கோர்ட் சம்மன்
ADDED : டிச 23, 2024 04:26 AM

லக்னோ : லோக்சபா தேர்தலின் போது பொருளாதார கணக்கெடுப்பு தரவுகளை வைத்து வர்க்க ரீதியாக வெறுப்பை பரப்ப முயன்றதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மீது தொடரப்பட்ட வழக்கில், உத்தர பிரதேச நீதிமன்றம் அவர் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் லோக்சபா தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் எம்.பி., ராகுல், பொருளாதார கணக்கெடுப்பில் உள்ள விபரங்களை வைத்து பேசினார்.
அப்போது, 'விளிம்பு நிலை மக்களின் எண்ணிக்கை அதிகம் இருந்தாலும், அவர்கள் வைத்திருக்கும் சொத்துக்களின் அளவு குறைவாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், அதிக மக்கள் தொகை இருப்பவர்கள், அதிக சொத்துக்கள் கேட்பர்' என கூறினார்.
இது அரசியல் ஆதாயத்திற்காக வர்க்கரீதியாக வெறுப்பை துாண்டி, மோதலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அகில இந்திய ஹிந்து மஹா சங்கத்தின் மண்டல தலைவரான பங்கஜ் பதக் என்பவர், ராகுலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆகஸ்டில் இது தொடர்பாக மனு அளித்தார். அந்த மனுவை நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, பரேலி செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதை விசாரித்த நீதிபதி ஜன., 7ல் ராகுல் ஆஜராக சம்மன் அனுப்பும்படி உத்தரவிட்டார்.