சர்ச்சை ஐ.ஏ.எஸ்., பூஜா கேத்கர் மத்திய அரசு பணியிலிருந்து விடுவிப்பு
சர்ச்சை ஐ.ஏ.எஸ்., பூஜா கேத்கர் மத்திய அரசு பணியிலிருந்து விடுவிப்பு
ADDED : செப் 07, 2024 06:53 PM

மும்பை : சர்ச்சை ஐ.ஏ.எஸ். ,அதிகாரி பூஜா கேத்கர், மத்திய அரசு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பூஜா கேத்கர் யு.பி.எஸ்.சி., தேர்வில் அகில இந்திய அளவில் 821வது இடத்தை பிடித்து பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்து, புனே உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
அரசால் வழங்கப்படாத வசதிகளை அத்துமீறி பெற்று தன் சொகுசு காரில் அரசு பெயர் பலகை மற்றும் சிவப்பு - நீல சுழல் விளக்கு பயன்படுத்தியது, ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்தபோது, உடல் ரீதியான குறைபாடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான சான்றிதழ்களை முறைகேடாக சமர்ப்பித்தது என அடுத்தடுத்து புகார்களில் சிக்கினார்.
இதுகுறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு நபர் கமிஷனை சமீபத்தில் அமைத்தது. சர்ச்சையில் சிக்கிய பூஜா கேத்கர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதை தவிர்க்க முன்ஜாமின் கோரி கோர்ட்டில் மனு செய்துள்ளார்.
இந்நிலையில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த உரிய விதிமுறைகளின் கீழ் மத்திய அரசு பணியிலிருந்து பூஜா கேத்கர் விடுவிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.