sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

3 மசோதாக்களை ஆய்வு செய்ய கூட்டுக்குழு அமைப்பதில் இழுபறி! சேரலாமா, வேண்டாமா என காங்கிரஸ் கட்சி ஊசலாட்டம்

/

3 மசோதாக்களை ஆய்வு செய்ய கூட்டுக்குழு அமைப்பதில் இழுபறி! சேரலாமா, வேண்டாமா என காங்கிரஸ் கட்சி ஊசலாட்டம்

3 மசோதாக்களை ஆய்வு செய்ய கூட்டுக்குழு அமைப்பதில் இழுபறி! சேரலாமா, வேண்டாமா என காங்கிரஸ் கட்சி ஊசலாட்டம்

3 மசோதாக்களை ஆய்வு செய்ய கூட்டுக்குழு அமைப்பதில் இழுபறி! சேரலாமா, வேண்டாமா என காங்கிரஸ் கட்சி ஊசலாட்டம்


ADDED : செப் 30, 2025 02:36 AM

Google News

ADDED : செப் 30, 2025 02:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர், தொடர்ச்சியாக, 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால், அவர்களின் பதவி தானாகவே பறிபோகும் வகையில் உருவாக்கப் பட்டுள்ள அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை ஆராய்வதற்கான பார்லி., கூட்டுக்குழுவில் சேரலாமா, வேண்டாமா என, காங்கிரசில் குழப்பம் நீடிப்பதாக கூறப்படுகிறது.

இதனால், மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூன்று மசோதாக்களை ஆய்வு செய்ய, கூட்டுக்குழுக்களை அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. நம் நாட்டில் தற்போது அமலில் உள்ள மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் - 1951ன் படி, ஊழல் வழக்குகளில் அரசியல்வாதிகள் சிறை தண்டனை பெற்றால், ஆறு ஆண்டுகளுக்கு எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது.

விசாரணைக்காக, நீதிமன்ற காவலில் இருக்கும் ஒரு எம்.எல்.ஏ.,வை கூட, இந்த சட்டம் தானாகவே பதவியில் இருந்து நீக்குவதில்லை.

இந்நிலையில் தான், ஜூலை - ஆகஸ்டில் நடந்த பார்லி., மழைக்கால கூட்டத்தொடரில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, மூன்று மசோதாக்களை அறிமுகப்படுத்தினார்.-

யூனியன் பிரதேச அரசு திருத்த மசோதா; அரசியலமைப்பு சட்டத்தின் 130வது பிரிவு திருத்த மசோதா, ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.

கடும் அமளி


இதில் மிக முக்கியமானது, அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா. இது, ஊழல் உட்பட தீவிர குற்றச்சாட்டுகளில் சிக்கும் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் தொடர்ச்சியாக, 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கும் நிலை உருவானால், அவர்களின் பதவி தானாகவே பறிபோக வழிவகை செய்கிறது.

இந்த மசோதா குறித்து அமைச்சர் அமித் ஷா கூறுகையில், 'சிறையில் இருந்து யாருமே அரசை நடத்தக்கூடாது. அதை இந்த மசோதா உறுதி செய்யும்' என்றார்.

இது, வெறும் சாதாரண மசோதா அல்ல. மத்திய உள்துறை அமைச்சரால் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு திருத்த மசோதா. லோக்சபா, ராஜ்யசபாவில் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.,க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே நிறைவேற்ற முடியும்.

இதற்கு, எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பும் அவசியம். இதனால் தான், மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட உடனே, 'பார்லி., கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும்' என, அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார்.

ஆனால், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அப்போதே கடும் அமளியில் இறங்கின. இந்த மசோதா, தங்களை குறிவைப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.

குறிப்பாக, 'இண்டி' கூட்டணியின் முக்கிய கட்சிகளான திரிணமுல் காங்., ராஷ்ட்ரீய ஜனதா தளம், உத்தவ் சிவசேனா, சமாஜ்வாதி, தி.மு.க., போன்றவை கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு, 'பார்லி., கூட்டுக்குழு அமைக்கப்பட்டால் புறக்கணிப்போம்' என அறிவித்தன.

வழக்கமாக, கூட்டத்தொடர் முடிந்த உடனே கூட்டுக்குழுக்கள் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால், மழைக்கால கூட்டத்தொடர் முடிந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிய நிலையில், இதுவரை அமைக்கப்படவில்லை.

சமாதான முயற்சி


எதிர்க்கட்சிகளின் பிடிவாதமே இந்த இழுபறிக்கு காரணம் எனக் கூறப்படும் நிலையில், அக்கட்சிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில், பா.ஜ.,வைச் சேர்ந்த பார்லி., விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு தீவிரமாக இறங்கி உள்ளார்.

இது தொடர்பாக, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் மூத்த எம்.பி., ஜெய்ராம் ரமேஷ், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி ஆகியோரை தொடர்பு கொண்டு, கூட்டுக்குழுவில் இடம்பெறும் அவரவர் கட்சிகளின் எம்.பி.,க்களின் பெயர்களை அனுப்பும்படி கேட்டுள்ளார்.

கிரண் ரிஜிஜுவிடம் கார்கே முதலில் சம்மதம் தெரிவித்தாலும், பின், நிலைப்பாட்டை மாற்றி விட்டதாகக் கூறப்படுகிறது.

'இண்டி' கூட்டணியின் முக்கிய கட்சிகள் எல்லாம் ஒரு நிலைப்பாட்டில் இருக்கும் போது, அதற்கு மாறாக கூட்டுக்குழுவில் சேர்ந்தால் சிக்கலை உருவாக்கும்; எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை உடைந்துவிடும் என்ற அச்சமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

எனினும், இந்த கட்சிகளை போல அல்ல காங்கிரஸ். அது ஒரு தேசிய கட்சி. அப்படி இருக்கையில், கூட்டுக்குழுவில் இடம்பெற மாட்டோம் என பிடிவாதம் பிடித்தால், ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் அக்கறை இல்லாத கட்சி என்ற பிம்பமும், குற்றச்சாட்டும் காங்., மீது விழும் என்றும் அக்கட்சியின் சில மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.

எனவே, இந்த விவகாரத்தில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்ற குழப்பம், காங்கிரசை ஆட்டிப்படைப்பதால், கூட்டுக்குழு அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை, மூன்று மசோதாக்களை ஆய்வு செய்வதற்கான கூட்டுக்குழுவில் இடம்பெறும் எம்.பி.,க்களின் பெயர்களை தர எதிர்க்கட்சிகள் மறுத்தால், அக்கட்சிகள் இல்லாமலேயே, விரைவில் கூட்டுக்குழு அமைக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது டில்லி நிருபர் -






      Dinamalar
      Follow us