சர்ச்சை பேச்சு: பா.ஜ., வேட்பாளர் நவ்னீத் ராணா மீது வழக்கு
சர்ச்சை பேச்சு: பா.ஜ., வேட்பாளர் நவ்னீத் ராணா மீது வழக்கு
UPDATED : மே 10, 2024 10:47 PM
ADDED : மே 10, 2024 10:41 PM

புதுடில்லி : ஏ.ஐ.எம்.ஐ.எம்., மூத்த தலைவர் அக்பருதீன் ஓவைசி பேச்சுக்கு பதிலடியாக பேசிய சம்பவத்தையடுத்து பா.ஜ., பெண் வேட்பாளர் நவ்னீத் ராணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் லோக்சபா தொகுதிக்கு மீண்டும் போட்டியிடும் ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசியை எதிர்த்து பா.ஜ., வேட்பாளராக மாதவி லதா போட்டியிடுகிறார்.
இந்நிலையில் ஓவைசி கடந்த 2013ம் ஆண்டு பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில் ஹிந்துக்களை குறி வைத்து, '15 நிமிடங்களுக்கு போலீஸ் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்; எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை காட்டுகிறோம்' என்று அவர் பேசியதாக கூறப்படுகிறது.
இதனை நினைவுப்படுத்தி நடந்த பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டத்தில் மாதவி லதாவை ஆதரித்து மஹாராஷ்டிரா அமராவதி லோக்சபா தொகுதி பா.ஜ. வேட்பாளரும், நடிகையுமான நவ்னீத் ராணா பேசுகையில், . உங்களுக்காவது, 15 நிமிடங்கள் தேவை; எங்களுக்கு 15 வினாடிகள் போதும் என்றார். இவரது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து போலீசில் புகார் கூறப்பட்டதாக கூறப்படுகிறது. ஷாத் நகர் காவல் நிலைய போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் நவ்னீத் ராணா மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.