ADDED : நவ 21, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:பணியின் போது, எலக்ட்ரிக் ஷாக் அடித்து, 30 வயது நபர் இறந்தார்.
ஹிரேந்திரா என்பவர், உத்தர பிரதேசத்தின் மெயின்புரி என்ற பகுதியை சேர்ந்தவர். டில்லியில் பணியாற்றி வந்தார். விருந்தினர் மாளிகை ஒன்றில், சமையல் கலைஞராக இருந்த அவர், நேற்று முன்தினம் மாலையில் பணிக்கு சென்றார்.
அங்கிருந்த தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடித்த போது, எலக்ட்ரிக் ஷாக் அடித்து, அவர் மயக்கம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
அந்த பகுதியை ஆய்வு செய்த போலீசார், எலக்ட்ரிக் ஷாக் அடிக்க காரணமாக இருந்த தண்ணீர் குழாயை படம் பிடித்தனர்; எதற்காக அந்த குழாயில் எலக்ட்ரிக் ஷாக் அடித்தது என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

