சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு ரயில்களில் உணவை நிறுத்த திட்டம்
சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு ரயில்களில் உணவை நிறுத்த திட்டம்
ADDED : மார் 12, 2026 02:39 AM

புதுடில்லி: நாடு முழுதும் சமையல் காஸ் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், ரயில்களில் வழங்கப்படும் உணவு சேவையை தற்காலிகமாக நிறுத்த, ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் பரிசீலித்து வருகிறது.
ரயில்களில் உணவு சேவையை ஐ.ஆர்.சி.டி.சி., நிர்வகித்து வருகிறது.
எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால், ரயில்களில் சமைத்த உணவு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த ஐ.ஆர்.சி.டி.சி., பரிசீலித்து வருகிறது.
இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:
ஐ.ஆர்.சி.டி.சி., தினமும் 17 லட்சம் உணவு பொட்டலங்களை ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள் வழியாக வழங்கி வருகிறது.
சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டால், மாற்று சமையல் முறைகளை பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பயணியரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், உடனடியாக தயாரித்து சாப்பிட கூடிய உணவுப் பொருட்களை போதுமான அளவில் கையிருப்பில் வைத்திருக்க உத்தர விட்டுள்ளோம்.
ரயி ல் டிக்கெட் உடன் உணவுக்கான கட்டணம் செலுத்தியவர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை என்றால் கட்டணம் திருப்பி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

