l புதினாவை நன்கு காய வைத்து இடித்து பொடியாக்கி, அரிசியில் துாவி வைத்தால் வண்டு விழாது
l எலுமிச்சை சாதம் செய்யும்போது இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை கொர கொரப்பாக அரைத்து வதக்கி, சாதத்தில் போட்டு கிளறினால் சுவையாக இருக்கும்
l பச்சை மாங்காயை கோதுமைக்குள் வைத்து மூடி வைத்தால் விரைவில் பழுத்துவிடும்
l பூசணிக்காயின் உள்பகுதியில் இருக்கும் சவ்வு பகுதியை வீணாக்காமல், தோசை மாவு அரைக்கும்போது சேர்த்து அரைத்தால் தோசை மிருதுவாக இருக்கும்
l ஸ்வீட்கள் செய்யும்போதும் அதில் சர்க்கரையின் அளவை குறைத்து, கற்கண்டை பொடியாக்கி சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும்
l உடைத்த தேங்காய் காய்ந்து போனால் அதில் பாலை ஊற்றி ஊறவைத்து 10 நிமிடம் கழித்து பயன்படுத்தினால் புதியது போன்று இருக்கும்
l தக்காளியை உப்பு கரைத்த நீரில் போட்டு எடுத்து வைத்தால் சீக்கிரம் கெட்டு போகாது
l வீட்டில் எந்த வற்றல் தயார் செய்யும்போதும் இரண்டு ஸ்பூன் கசகசாவை சேர்த்துக் கொண்டால் வற்றல் சுவையாக இருக்கும்
l உருளை கிழங்கை வேகவைக்கும் முன்பு 15 நிமிடங்கள் உப்பு தண்ணீரில் ஊறவைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்
l மோர் குழம்பு வைக்கும் போது நெல்லிக்காயை அரைத்து சேர்த்தால் சுவை கூடும்
l கட்லட் செய்ய பிரட் கிரம்ப்ஸ் கிடைக்கவில்லை என்றால், ரவையை மிக்ஸியில் அரைத்து பயன்படுத்தலாம்
l கேரட், வெங்காயத்தை எண்ணெயில் போட்டு வதக்கும்போது கொஞ்சமாக சர்க்கரையை சேர்த்தால் நன்றாக வதங்கி பொன்னிறமாக வரும்
l தக்காளி சூப் நீர்த்து போனால், வெந்த உருளைகிழங்கை மசித்து சேர்த்தால் சுவையும் கூடும். சூப்பும் சரியான பதத்திற்கு வரும்
l தயிர் வடையின் மேல் வறுத்து அரைத்த சீரக பொடியை துாவினால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

