ADDED : ஜன 20, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: மெட்ரோ ரயில் வேலைக்காக வைக்கப்பட்டு இருந்த செம்பு கம்பிகளை திருடியவரை போலீசார் தேடுகின்றனர்.
பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தின் பச்சை வழித்தடத்திற்கான பணிகள், நகரின் பல பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகின்றன.
இவ்வகையில் பீன்யா, ராஜாஜிநகர், பசவனகுடி ஆகிய இடங்களில் பச்சை வழித்தடத்திற்கான பணிகள் நடக்கின்றன. இதில் மின் வினியோகத்திற்கான செம்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தது.
இந்த கம்பிகள் துண்டு துண்டாக வெட்டி திருடப்பட்டு உள்ளன. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கலாம்.
மெட்ரோ உதவி பாதுகாப்பு அதிகாரி சந்திரசேகர், தனித்தனியாக மூன்று போலீஸ் நிலையங்களில் புகார் செய்து உள்ளார்.