கொரோனா பாதிப்பு: 48 மணி நேரத்தில் இந்துாரில் 3 பேர் பலி
கொரோனா பாதிப்பு: 48 மணி நேரத்தில் இந்துாரில் 3 பேர் பலி
ADDED : ஜூலை 08, 2025 10:33 PM

இந்துார்: இந்துாரில் கடந்த 48 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதித்த 3 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய பிரதேச மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் மாதவ் பிரசாத் ஹசானி கூறியதாவது:
மாநிலத்தில் உள்ள இந்துாரில் கடந்த 48 மணி நேரத்தில் 3 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதித்த மூன்று பெண்கள் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று முன்தினம் 64 வயதுள்ள பெண்ணும், 55 வயதுள்ள ஒரு பெண்ணும் உயிரிழந்தனர். நேற்று 50 வயதுடைய பெண் உயிரிழந்தார். இவர்கள் மூவருக்கும் ஏற்கனவே வெவ்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதன் காரணமாக, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விட்டது. மேலும் அவர்களுக்கு ரத்த புற்று நோய், காசநோய், நீரிழிவு மற்றும் தைராய்டு கோளாறு போன்ற நோய்கள் இருந்தன.  ஆகையால் பொதுமக்கள் யாரும் பீதி அடைய தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

