ADDED : ஆக 27, 2025 10:23 PM

புதுடில்லி:மாநகரின், 250 வார்டு களிலும் தெருநாய்களுக்கு உணவு வழங்கும் இடங்களை அடையாளம் காணும் பணிகள் நடக்கின்றன. இடம் வழங்கக்கூடிய நாய் பிரியர்கள் மற்றும் விலங்கு ஆர்வலர்களுக்கு விரைவில் அழைப்பு விடுக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் திரியும் தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைத்து பராமரிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தில் இந்த உத்தரவுக்கு தெரு நாய் பராமரிப்பாளர்கள் மற்றும் விலங்கு ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டங்களும் நடத்தினர்.
மேலும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தெரு நாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க தடை விதித்தது.
அதற்குப் பதிலாக, தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை செய்யவும், ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தி அவற்றைப் பிடித்த இடத்திலேயே விடுவிக்கவும் உத்தரவிட்டது.
மேலும், தெரு நாய்களுக்கு உணவு வழங்க டில்லி மாநகர் முழுதும் பிரத்யேக இடங்களை அமைக்கவும், விதிமுறைகளை மீறி மற்ற இடங்களில் உணவு வழங்குப்வோருக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், டில்லி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, டில்லி மாநகரம் முழுதும் தெருநாய்களுக்கு உணவளிக்கும் பிரத்யேக இடங்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது. மாநகரின், 250 வார்டுகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து சற்று தூரத்தில், தெருநாய்க்கு உணவளிக்கும் இடங்கள் அமைக்கப்படு பராமரிக்கப்படும்.
மாநகராட்சியின் இந்தப் பணியில் தெரு நாய் பராமரிப்பாளர்கள் மற்றும் விலங்கு ஆர்வலர்களை ஈடுபடுத்த முடிவு செய்து உள்ளோம்.
தெருநாய்களுக்கு உணவளிக்கும் பிரத்யேக இடத்துக்கு நிலம் வழங்க தெரு நாய் பராமரிப்பாளர்கள் மற்றும் விலங்கு ஆர்வலர்கள் முன்வந்தால் பரிசீலிப்போம்.
தெருநாய்க்கான உணவு மையங்கள் நடை முறைக்கு ஏற்றதாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய கால்நடைத் துறை, சுகாதாரத் துறை, குடியிருப்போர் நலச்சங்கங்கள், மக்கள் பிர திநிதிகள் மற்றும் பொதுமக் களிடம் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
மேலும், துவாரகா 29வது செக்டார் மற்றும் பேலா சாலையில் ஆக் ரோஷ மான தெருநாய்களை பராமரிக்கும் காப்பகங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

